மகள்கள் தெரிவித்த சம்மதம்! 28 வயது இளைஞரை கரம் பிடிக்கிறார் 43 வயது நடிகை!

சென்னை: 43 வயதாகும் சுஷ்மிதா சென், 28 வயது மாடல் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


முதன் முதலில் உலக அழகிப் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான சுஷ்மிதா சென், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

43 வயதாகும் இவர், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் நடித்தும் உள்ளார். இதுதவிர, 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென், சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதும் வழக்கம். 

இந்நிலையில், அவர் தற்போது திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆம். நீண்ட தனிமைக்குப் பிறகு, ரோமன் ஷால் என்ற 28 வயது ஆண் மாடலை திருமணம் செய்துகொள்ள சுஷ்மிதா சென் தீர்மானித்துள்ளார்.

இவர்கள் 2 பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, காதலித்து வருகிறார்கள். இதுபற்றி சமூக ஊடகங்களில் அவ்வப்போது தாங்கள் டேட்டிங் செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக, வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருவரும் தீர்மானித்துள்ளனராம். இதற்கு, சுஷ்மிதாவின் வளர்ப்பு மகள்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள சுஷ்மிதா சென், திருமண வேலைகளை தொடங்கியுள்ளதாகவும், தகவல்கள் குறிப்பிடுகின்றன.