43 வயது பெண்ணை கொழுந்தனார் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் வீட்டில் வளர்ந் கள்ளக் காதல்! அண்ணிக்கு கொழுந்தனால் ஏற்பட்ட விபரீதம்! அதிர வைக்கும் காரணம்!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவியின் பெயர் சுலோச்சனா. இவருடைய வயது 43. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்துவிட்டனர். இதனிடையே கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் திருச்சியிலிருந்து விருந்துக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளார். ரமேஷுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுலோச்சனாவுக்கும் ரமேஷுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது பிற்காலத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வாரந்தோறும் சுலோசனா ரமேஷை சந்தித்து வந்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திரா நகரில் சுலோச்சனாவின் மருமகன் வீடு உள்ளது. இந்த இடத்தில் தான் யாருக்கும் தெரியாமல் சுலோச்சனா ரமேஷ் சந்தித்து வந்துள்ளார். சுலோச்சனாவிடம் ரமேஷ் அவருடைய பெயரில் உள்ள வீட்டை சுலோச்சனாவின் பெயரில் எழுதி வைப்பதாக ஆசை காட்டியுள்ளார்.
இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது சொத்து தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சொத்தை தன் பெயரில் எழுதி வைத்தால்தான் மீண்டும் சந்திக்க இயலும் என்று சுலோச்சனா ரமேஷிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுலோச்சனாவை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை வீட்டுக்கழிவறை தொட்டியில் வைத்து மறைத்துவிட்டார்.
இந்நிலையில் ரமேஷ் மது அருந்திவிட்டு ஒரு கொலை செய்துவிட்டதாக அப்பகுதி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனைக் கேட்ட காவல்துறையினர் ரமேஷுடன் சென்று கழிவறையில் மறைந்திருந்த பிணத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.