காதல்! திருமணம்! முதலிரவில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

மாற்றுத் திறனாளிப் பெண்ணை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட 42 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பாதிக்கபட்ட் பெண் மும்பை அருகே ஜோகேஸ்வரியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் அதே அச்சகத்தில் வேலை செய்த ராஜேஷ் பட்டேல் என்ற நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன் அந்த அச்சகத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தப் பெண்ணை சந்தித்தாகவும் கூறப்படுகிறது. 

அது முதல் இருவரும் பழகி வந்த நிலையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அந்தப் பெண்ணின் வார விடுமுறை தினத்தன்று தனக்கு அலுவலகத்தில் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு  அந்தப்பெண் சென்றநிலையில் ராஜேஷும் அந்தப் பெண்ணும் இரு சக்கர வாகனத்தில் தானேவில் உள்ள வஜ்ரேஸ்வரி கோவிலுக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்ற ராஜேஷ், அங்கு அந்தப் பெண்ணுடன் பாலுறவில் ஈடுபட்டதோடு நேர்ந்த எதையும் தனது குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ராஜேஷின் அணுகுமுறையில் அதுவரை இல்லாத மாற்றம் தெரிந்தது

இதையடுத்து வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அனைத்தையும் தனது தந்தையிடம் தெரிவித்தார். இதையடுத்து தனது பெண்ணின் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவரது உணர்வுடன் ராஜேஷ் விளையாடி விட்டதாக அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர்.