சட்டக்கல்லூரி மாணவியுடன் 42 வீடியோக்கள்! கண் கண்ணாடியில் கேமரா! பாஜக முன்னாள் அமைச்சர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான சின்மயானந்த் பாலியல் குற்றப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்கார புகாரில் சுவாமி சின்மயானந்தா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் ஆசிரமம் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்த சின்மயானந்த் தற்போது தான் நிர்வகித்து வந்த சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அவர் வழக்கு கொடுத்த மறுநாளே மாணவி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் காவல்துறையினர் அந்த மாணவியை கண்டுபிடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது சின்மயானந்த் சட்டக்கல்லூரியில் உள்ள ஏழை எளிய மாணவிகளை குறிவைத்து அவர்களை பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.  

இந்நிலையில் அவர்களை பலாத்காரம் செய்யும் போது வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக அப்பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால் தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை கூறி தப்பித்து வந்துள்ளார்.இதையடுத்து கடந்த 13ம் தேதி சினிமா விசாரணைக்கு ஆஜரானார். உச்சநீதிமன்றம் நியமித்த உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு விசாரணைக் குழு பல கட்ட விசாரணைகளை நடத்தியது.

இதையடுத்து தனது குற்றச்சாட்டு தொடர்பாக வீடியோக்கள் அடங்கிய பென்ட்ரைவை அந்த மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் அழைத்துள்ளார் .இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின் பேரில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.