இதுதான்டா காங்கிரஸ்! காங்கிரஸ் கட்சி மேடையில் 419 பேர், ராஜீவ்காந்திக்கு நேர்ந்த அவமானம்!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று ராஜீவ் காந்தியின் நினைவுதினம் காமராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டது.


காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி குணம் உண்டு. அதாவது யாரும், யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுதான் நேற்றைய விழா மேடையிலும் தென்பட்டது. ஆம், கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மேடையில் மட்டும் சுமார் 419 பேர் ஏறி நின்றதாக கணக்குக் காட்டுகிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் யாரை கீழே அனுப்புவது, யாரை பேசுவதற்கு அழைப்பது என்றெல்லாம் தெரியாமல் தலைவர் அழகிரி டென்ஷன் ஆகிவிட்டாராம். டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடக்கும்போது, பேசுபவரைத் தவிர அத்தனை பேரையும் மேடைக்குக் கீழே அனுப்பிவிடுகிறார்கள்.

ஆனால், சென்னையில்தான் இப்படியெல்லாம் விசித்திரங்களைப் பார்க்க முடிகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக எல்லோரும் மேடையில் ஏறி நின்றால், யார் பேசுவது? யார் கேட்பது, யார், யாரைக் கட்டுப்படுத்துவது என்று சாதாரண தொண்டர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அழகிரிக்கு மிகச்சிறப்பான ஐடியா ஒன்றை காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். ஆம், அடுத்து மீட்டிங் நடைபெறுவதாக இருந்தால், பார்வையாளர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றிவிடுங்கள். தலைவர்கள் அனைவரும் கீழே இருக்கலாம். எப்படியும் மேலே கூட்டம் குறைவாகத்தானே இருக்கப்போகிறது என்கிறார்.

என்னா அழகிரி சார், கேட்டுச்சா..?