ஸ்பெயின் நாட்டில் சூரியக் குளியல் எடுத்த பெண், கண்ணுக்குத் தெரியாத பூச்சி கடித்ததால் காலையே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குளிக்கும் போது கடித்த சிறிய பூச்சி..! கால்களையே இழக்கும் நிலைக்கு சென்ற 41 வயது தாய்! பதற வைக்கும் காரணம்!

பெனிட்ரோம் நகரைச் சேர்ந்தவர் ஃபாயே வில்கிஸ். இவர் அங்குள்ள நீர்நிலை ஒன்றின் அருகே சூரியக் குளியல் எடுக்கச் சென்ற போது தனக்கு நேரப் போகும் விபரீதம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. சூரியக் குளியல் எடுத்துவிட்டுப் புறப்பட்ட போது அவரது காலில் சிவப்பாக ஒரு தடிப்பு இருந்ததைக் கண்ட போது அதனை அவர் பெரிதாக கருதவில்லை.
அதற்காக அவர் ஏதோ ஒரு மருந்தை இட்டுவிட்டு தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டார். அன்று இரவு தான அவரது காலில் பூச்சிக்கடியால் நுழைய பாக்டீரியா வேலையைக் காட்டத்தொடங்கியது. இரவு முழுவதும் கால்வலி அவரது உறக்கத்தைக் கெடுத்த நிலையில் காலையில் கால் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன.
மருத்துவர்களிடம் சென்ற போது கால் முழுவதும் அழும் நிலையும் ஏற்படக் கூடும் என்று தெரியவந்த நிலையில், கடித்த பூச்சியின் தன்மையையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பின் தன்மையையும் ஆய்வு செய்து வரும் மருத்துவர்கள் அதற்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.