கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் திருமணமான 10 மாதத்திலேயே பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
40 வயதில் திருமணம்..! பத்தே மாதத்தில் வீட்டில் சடலமாக தொங்கிய முதிர்கன்னி! அதிர்ச்சி காரணம்! கன்னியாகுமரி பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் தாழமூட்டுவிளை அருகே அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் கேரள மாநிலம் எரிமேலியைசேர்ந்த சோபனா என்பவரை கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அயக்கோட்டில் வசித்து வந்த நிலையில் ஆரம்பத்தில் சுமூகமாக சென்ற திருமண வாழ்க்கையில் 6 மாதத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து 40 வயதை கடந்த நிலையில் திருமணம் செய்த பின்னரும் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போய்விட்டதே என மனவேதனையில் இருந்துள்ளார். நேற்றிரவு கணவர் மகேஷ் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் சோபனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நள்ளிரவு மகேஷ் வீடு திரும்பியபோது சோபானா தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் அளிக்க ஆய்வாளர் ராஜசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சோபனா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆன 10 மாதத்தில் சோபனா தற்கொலை செய்ததால் இது பற்றி கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தாசில்தார், தக்கலை ஆர்.டி.ஓ. ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.