40 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாலியல் வல்லுறவு! 20 வயது இளைஞரால் விபரிதம்!

மும்பை அந்தேரி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்பழித்துள்ளார்.


அந்தேரி பகுதியில் பல்வேறு குடியிருப்புகள் உள்ள ஒரு தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண்  ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அந்த  பெண் வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் அந்த வழியே சென்ற 20 வயது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து நிலையில் திடீரென அப்பகுதியில் இருந்த அந்தப் பெண்ணை அந்த நபர் தனிமையில் அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் அழைத்துச் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை அப்பகுதி மக்கள் கொடுத்த வரைபடத்தின் உதவியுடன் குற்றவாளியை போலீசார் தேடி வருவதாக காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.