டெல்லியில் 6 வயதுச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
6 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி 40 வயது நபர் அரங்கேற்றிய வக்கிரம்! பதற வைக்கும் சம்பவம்!
டெல்லியை அடுத்த பவனா என்ற இடத்தில் தனது வீட்டை விட்டு சற்றுத் தொலைவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அது குற்றவாளிக்கு சாதகமாக இருந்ததாகவும், அந்த நபர் அந்தச் சிறுமியிடம் அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நேர்ந்ததை அந்தப் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இல்லையா என தெரிந்துகொள்ள மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று மகாராஷ்டிர மாநிலம் விரார் நகரில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சமூக சேவகரை போலீசார் கைது செய்துள்ளனர். விரார் நகரில் உள்ள ஒரு பாலம் ஒன்றின் கீழே சாலையோரமாகத் தங்கியிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அத்துமீறியுள்ளார்.
சமூக சேவகரான ப்ரவீண் சதானந்த ஜாதவ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒதுக்குப் புறமான ஒரு இடத்துக்கு கொண்டுசென்றுபாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.