கெண்டை காலில் விழுந்த திடீர் ஓட்டை! 40 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட விநோத நோய்! மருத்துவர்களையே அதிர வைத்த புற்று கட்டி!

லண்டன்: கேன்சர் காரணமாக குதிகாலில் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார்.


வோர்சஸ்டர்சைர் என்ற பகுதியை சேர்ந்தவர் திருமதி. சோல்வேசன். 2 மகன்கள் உள்ள இவருக்கு  40 வயதாகிறது. சமீபத்தில் இவருக்கு குதிகாலில் கேன்சர் கட்டி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது காலில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. இதையடுத்து, இம்யூனோதெரபி மூலமாக, அவரது குதிகாலில் இருந்து பெரும் அளவு சதையை மருத்துவர்கள் அகற்றினர்.

இதனால், வேறு வழியின்றி குதிகாலில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, குதிகாலில் இருந்த கேன்சர் கட்டி படிப்படியாக அவரது பெண் உறுப்பு, முழங்கால், நுரையீரல் மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கும் பரவியது.  

பின்னர் மீண்டும் இம்யூனோதெரபி மூலமாக, அப்பெண் உடலில் இருந்து கேன்சர் கட்டிகளை டாக்டர்கள் அகற்றினர். தற்போது அவர் உடலில் கேன்சர் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் ஏற்படலாம் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.  

இதுபற்றி திருமதி சோல்வேசன் கூறுகையில், ''குதிகாலில் எதோ கண்ணாடி குத்தியது போன்ற வலி ஏற்பட்டது. அதற்கு சில கிரீம்கள் தடவி சரிசெய்ய முயன்றேன். ஆனால், பூஞ்சை தொற்று போல இருந்த அந்த பாதிப்பு, படிப்படியாக வளர்ந்து, கட்டியாக மாறிவிட்டது. இதன்காரணமாக, என்னால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

2017ம் ஆண்டில் இதற்காக கிட்டர்மின்ஸ்டர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றேன். அப்போதுதான் எனக்கு வந்திருப்பது கேன்சர் என தெரியவந்தது. ஒருவழியாக, குதிகாலில் ஓட்டை போட்டு அந்த கட்டியை டாக்டர்கள் அகற்றினர். பிறகு, அந்த ஓட்டையை அடைக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். ஆனாலும், திரும்ப உடலின் மற்ற பாகங்களுக்கு கட்டி பரவி பயங்கர வேதனையை கொடுத்தது. தற்போது அவற்றையும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளேன்,'' என்றார்.