சில நிமிட சபலம்! 40 வயது பெண்ணிடம் ரூ.1.5 கோடியை பறிகொடுத்த ஈரோடு தொழில் அதிபர்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஈரோடு அருகே காட்டன் துணி அதிபரிடம் ரூ.1.60 கோடி மோசடி செய்த புகாரில் டெல்லியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் காட்டன் துணி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் மோகன்ராஜ். கடந்த மே மாதம் மோகன்ராஜை அணுகிய ஹன்சூ சவுத்ரி என்ற பெண், தான் டெல்லியை சேர்ந்த சாய் கிரேசன் நிறுவன உரிமையாளர் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் ஒரு மாத கடன் அடிப்படையில் 1.40 லட்சம் மீட்டர் காடாத் துணி தருமாறு கேட்டுள்ளார். 

இதை நம்பிய மோகன்ராஜ் 1.60 கோடி மதிப்பு நாடாத் துணியை ஹன்சூ சவுத்ரியை நம்பி கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் ஹன்சூ சவுத்ரி பணம் தராததால் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார். அங்கு ஹன்சூ சவுத்ரி மற்றும் அவரது சகோதரர்கள் மோகன்ராஜை மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து, சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் மோகன்ராஜ்.

பின்னர் செல்போன் சிக்னல் மூலம் அந்தப் பெண் ஈரோடு பார்க் பகுதியிலேயே சுற்றித் திரிவதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் மோகன்ராஜிடம் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணின் இரண்டு சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே பெண் என்றதும் தொழில் அதிபர் சபலத்துடன் பேசியுள்ளார். இதனால் ஆசை காட்டி அந்த தொழில் அதிபரை மயக்கிய பெண், பணம் வந்ததும் கம்பி நீட்டியுள்ளார். இதனால் தான் சபலத்தால் ஒன்றரை கோடியை இழந்ததாக கூறி தொழில் அதிபர் புலம்பி வருகிறார்

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பார்கள்.. திரவியம் மட்டுமே தேடியவர் சிறைச்சாலையில்..