என்கூட செக்ஸ் வச்சிக்கோ! இல்லன்னா காய்ச்சல் வந்திடும்! கர்ப்பிணியிடம் கெஞ்சிய டாக்டர்!

என்கூட நீ பாலியல் உறவு வச்சிக்கலன்னா, எனக்கு காய்ச்சல் வந்திடும்,'' என, டாக்டர் ஒருவர் இளம்பெண்ணிடம் கெஞ்சிய சம்பவம் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே உள்ளது ஜூஹாபூர். இங்கு, 24 வயது இளம்பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர், மருத்துவ விசயங்களுக்காக, அடிக்கடி உள்ளூர் டாக்டரிடம் சிகிச்சை பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அந்த டாக்டரோ, இப்பெண்ணின் அழகில் வெறி பிடித்து அலைந்துள்ளார்.

ஒருகட்டத்தில் வெறி தலைக்கேறவே, இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார் டாக்டர். அங்கு, அந்த பெண்ணை கட்டிப் பிடித்துக் கொண்டு, முத்தம் கொடுத்த அவர், ''உன்னைப் போன்ற அழகியைத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. இருந்தாலும், ஒருமுறை என்கூட உடலுறவு வச்சிக்கோ. தயவுசெய்து என்கூட படு. இல்லன்னா எனக்கு காய்ச்சல் வந்திடும்,'' என  கிறுக்குத்தனமாக உளறியுள்ளார்.

அந்த பெண், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, கர்ப்பமாக உள்ளேன் என மறுத்தாலும், டாக்டர் விடுவதாக இல்லை. இறுதியாக, உங்களுக்கு 40 வயதாகிறது, எனக்கு 24 வயதாகிறது, எப்படி நமக்குள் திருமணம் சாத்தியம் என, அவர் கேட்டுள்ளார். இதனால், டாக்டர் தலையை தொங்கப் போட்டபடி, இடத்தை காலி செய்துள்ளார்.

இதன்பேரில், தற்போது அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.