40 வயசாகியும் கல்யாணம் மட்டும் ஆகல..! தவியாய் தவிக்கும் முன்னணி டிவி நடிகை! யார் தெரியுமா?

40 வயது தாண்டியாகிவிட்ட போதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் ரசிகர்களுக்கு சேவை செய்து வருகிறார் நடிகை ஸ்ருதிராஜ்


1995ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகம் ஆகி பின்னர் நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆன நடிகை ஸ்ருதி ராஜூக்கு தற்போது வயது 40. 

மேற்கண்ட 2 விஷயங்களை வைத்து மட்டுமே வைத்து இவர் யார் என உங்களுக்கு யூகிப்பது கடினம். கோலங்கள் தமிழ்த் தொலைக்காட்சி தொடரில் அறிமுகம் ஆன ஸ்ருதிராஜ், தென்றல் சீரியலில் நடித்து தற்போது அழகு சீரியலில் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளார்.

மாமியாருக்கு பிடித்த மருமகளாகவும், குடும்பத்தினை அனுசரித்து கொண்டு செல்லும் பெண்ணாகவும் சுதா கதாபாத்திரத்தில் வலம் வரும் ஸ்ருதிராஜின் நடிப்பு திறமையை பெண்களும் அதிக அளவில் ரசிக்கின்றனர்.

சின்னத்திரை, வெள்ளித்திரை நடித்து வரும் ஸ்ருதிராஜூக்கு 40 வயது ஆகிறது. அவரது இளமை ததும்பும் முகமும், அழகும் அவருக்கு 40 வயது என்பதை காட்டிக் கொடுக்காததால் இளமையாக தெரிகிறார். (அதுதான் நீங்கள் காட்டி கொடுத்துவிட்டீர்களே என்று பேசாதீர்கள்) ஆனாலும் தொடர்ந்து வெள்ளித்திரையில் சாதனை படைக்க வேண்டும் என நினைக்கும் ஸ்ருதி 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.