என் மகனுக்கு ஒரு உடன்பிறப்பு தேவைப்படுகிறது..! 40 வயது நடிகையின் வெளிப்படையான ஆசை!

டெல்லி: எனது மகளுக்காக, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன், என்று நடிகை குல் பனாக் தெரிவித்துள்ளார்.


முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்றவரான குல் பனாக், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகள் கடந்தும் இளமை மாறாமல், நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் தந்து, சமூக ஊடக பயனாளர்களை வியக்க வைத்த நடிகை குல் பனாக், தனது குடும்ப வாழ்க்கை பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், 40 வயதைக் கடந்தாலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிந்தவரை கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு தம்பி, பாப்பா வேண்டும் என எனது மகள் அடிக்கடி கேட்பதால், அவள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளேன். குடும்ப உறவுக்கே நான் அதிக முக்கியத்துவம் தர விரும்புகிறேன், என சென்டிமெண்டாகப் பேசியுள்ளார்.  

ஒரு முன்னணி நடிகை குடும்ப உறவுகள், தாய்மை பற்றி பேசியது பலரையும் வியப்படைய செய்துள்ளது.