10ம் வகுப்பு படிக்கும் போது 3 முறை கருக்கலைப்பு! தாய் மாமனால் அரங்கேறிய விபரீதம்! 40 வயதில் பெண் வெளியிட்ட பகீர் தகவல்!

4 வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக 40 வயது பெண் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சிறுவயதிலிருந்தே தன்னுடைய தாய்மாமா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். 1981-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 வயதாகியிருந்த போது, அவருடைய தாய்மாமா அவரை முதன்முதலாக பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பிறகு தொடர்ந்து அந்த பெண் தன்னுடைய தாய்மாமாவால் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். 10-ஆம் படிக்கும்போது அந்த பெண்ணுக்கு 3 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பெண்ணுக்கு திருமணமாகி 2014-ஆம் ஆண்டில் விவாகரத்தும் நடைபெற்றுள்ளது. அதிலிருந்து இந்தப்பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டில் இந்த பெண்னின் தாயார் இறந்துள்ளார். அப்போதுகூட இந்த பெண்ணை தன்னுடைய தாயாரின் உடலை பார்ப்பதற்கு உறவினர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் சொல்வது போன்று நடப்பதாக உறுதியளித்த பின்னரே இந்த பெண்னை தன்னுடைய தாயாரின் உடலை பார்க்க அனுமதித்துள்ளனர். 

இதுகுறித்து பலமுறை தன்னுடைய குடும்பத்தினரிடம் அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் குடும்பத்தினர் இவருக்கு ஆதரவளிக்காமல் இதனை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளனர். தற்போது 40 வயதாகியுள்ள இந்தப்பெண் காவல்நிலையத்தில் பல வருடங்களாக தனக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இந்த பெண்ணின் உறவினர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.