திடீரென அதிகரித்த வெயில்! வெப்ப அலையில் சிக்கி 70 பேர் பலி! ஒரே ஊரில் 27 பேர் உயிரிழப்பு!

பீகார் மாநிலத்தில் வெப்ப அலையானது 40-க்கும் மேற்பட்ட பொது மக்களை சாகடித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெப்ப அலையானது மிகவும் அபாயகரமானது. இது வெப்ப நிலை அதிகரிப்பினால் ஏற்படக்கூடியது. இது மூளையில் ஸ்ட்ரோக் போன்ற கொடிய நோய்களை உண்டாக்கும். கிட்டத்தட்ட 70 பேர் இந்த வெப்ப அலையினால் பிஹாரில் இறந்துள்ளனர். அவுரங்காபாத் என்னும் நகரில் மட்டும் 27 பேர் இறந்துள்ளனர். 

அவுரங்காபாதில் பணிபுரியும் மருத்துவரிடம் விசாரித்தபோது, "இந்த சாவு எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் அபாயத்தை கொண்டது. இந்த நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இதற்கு உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இறந்தவர்கள் அதிக வெப்பநிலையினால் காய்ச்சலால் அவதிப்பட்டு இருந்தவர்களாவர்" என்றும் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற புனித ஸ்தலமான கயாவில் 12 பேர் வெப்ப ஸ்டோர்க்கினால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.முசாபர்பூர் நகரில் என்ஸிபாலிடிஸ் எனப்படும் மூளையில் ஏற்படும் வீக்க நோயினால் 80-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதுவரை இறந்துள்ளனர். 

மத்திய சுகாதாரத்துறை மந்திரியான ஹர்ஷவர்தன் அவர்கள் கூறுகையில்," கயாவில் 12 பேர் உயிரழந்திருப்பது துரதிர்ஷ்ட வசமானது. வெப்பநிலை அதிகரிக்கும்போது யாரும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.

மேலும் கூறுகையில், முசாபர்பூரில் குழந்தைகள் அதிக அளவில் இறந்திருப்பதற்கு "ஹைபோகிளைசீமியா" எனப்படும் ரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவே காரணம் ஆகும்" என்றும் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.