தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி! தந்தை உயிருடன் இருப்பதாக நினைத்து 4 வயது மகன் செய்த நெகிழ்ச்சி செயல்! கலங்க வைக்கும் நிகழ்வு!

லக்னோ: தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தையின் சிலையை மகள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகிவருகிறது.


சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டம், இர்பானார் என்ற கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நக்சல் தீவிரவாதிகளால்,  போலீசார் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், மூல்சந்த் என்ற காவலரும் அடக்கம். இந்நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மூல்சந்தை கவுரவிக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

இந்த சிலை திறப்பு நிகழ்வில், அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். அப்போது, மூல்சந்தின் 2 வயது மகள், தனது தந்தை உயிரோடு இருப்பதாக நினைத்து, சிலையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.  

இது பார்ப்பவர்களை நெகிழச் செய்வதோடு, தீவிரவாத தாக்குதல்களால் மானுட சமூகம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.