குழந்தைகளுடன் விளையாடிய 4 வயது சாமினி பாப்பா மாயம்! 1 வாரமாக கதறும் பெற்றோர்! கண்டுகொள்ளாத போலீஸ்! கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டத்தில் குழந்தை காணாமல் போய் ஒரு வாரம் ஆகியும் வீடு திரும்பாததால் சோகத்தில் பரிதவிக்கும் பெற்றோர் போஸ்டர் அடித்து மக்களுக்கு தெரியபடுத்தி வருகின்றனர்.


கோவை மாவட்டம் சூலூரில் விசைத்தறி தொழிலாளியான ஜெயக்குமார், கவிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் இளைய மகள் சாமினிக்கு வயது 4 ஆகிறது. கடந்த 5ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை யாரோ மர்மநபர்கள் சிலர் கடத்தி உள்ளனர். 

இதானால் பதற்றம் அடைந்த தம்பதி பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் கடைசியாக காவல்துறையை நாடியுள்ளனர். போலீசாரும் வழக்குப்பதிந்து காணாமல் போன குழந்தையை தேடி வருகின்றனர். இந்நிலையில் குழந்தை மாயமாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. குழந்தைக்கு என்ன ஆனது என தெரியாமல் விழி பிதுங்கி வேதனையுடன் காத்திருக்கின்றனர் ஜெயக்குமார், கவிதா தம்பதி.

தன் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு கோவை முழுவதும் போஸ்டர் அடித்துள்ளனர். இவர்களது மூத்த மகள் ஹாரினி கடந்த வருடம் காணாமல் போய் உள்ளார். ஆனால் பொதுமக்கள் உதவியுடன் உடனே கிடைத்து விட்டாள். தற்போது குழந்தையை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

குழந்தையை தேடி கிணறு, குட்டை, ஏரி, புதர்களிலும் தம்பதி வேதனையுடன் தேடிப் பார்க்கும் வேதனையான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.