சுஜித் மரணம் தந்த வலி தீராத நிலையில் திண்டிவனத்தில் 4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பயங்கரம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குட்டையில் மூழ்கி மீண்டும் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரழந்த சம்பவத்தை அடுத்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் பெற்றோரின் அஜாக்கிரதையால் குழந்தைகள் உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. தண்ணீர்த் தொட்டியிலும், பக்கெட் நீரில் மூழ்கி ஏதுமறியா சின்னஞ்சிறிய குழந்தைகள் தங்களுடைய உயிரை இழந்துளனர். 

இந்நிலையில் திண்டிவனம் அடுத்த கம்பூரை சேர்ந்த முருகன்-மேகலா தம்பதியின் குழந்தை ரித்திகா. பண்ணைக் குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரித்திகா நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த மற்ற குழந்தைகள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு வந்தவர்கள் குழந்தையை பண்ணை குட்டையிலிருந்து மீட்டனர்.

திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தையை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ‌