செல்போனில் தாய் பிஸி ! 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டின் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் மனைவி மலர் இருவருக்கும் 4 வயதில் மகள் மௌசிகா உள்ளார். கடந்த வெள்ளி கிழமை மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால் கனியில் தாய் மலர் மகள் மௌசிகாவுக்கு சாப்பாடு ஊட்டிவந்துள்ளார். அந்த நேரம் பார்த்து செல்போன் ஒலிக்க,  விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மௌசிகாவை அப்படியே பால்கனியிலேயே விட்டபடி  போனை எடுக்கச் மலர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் போனில் மலர் பிசியாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரண்டடி உயரமே சுற்றுச்சுவர் உள்ள அந்த பால்கனியின் ஒரு பகுதியில் விளையாடிய மெளசிகா அந்தக் கம்பித் தடுப்பில் கால்வைத்து ஏற முயற்சித்துள்ளார்.  எதிர்பாராத விதமாக இமை பொழுதில் அவர் பால்கனி வழியாக 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீழே இருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அருகே  உள்ள மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், சிகிச்சைப் பலனின்றி மௌசிகா பரிதாபமாக உயிரிழந்தார். செல்போனில் பிசியாக இருக்கும் போது பால்கனியில் குழந்தையை விட்டுச் செல்லக்கூடாது. குழந்தை விஷயத்தில் சிறிது அலட்சியம் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.