ரத்தத்தில் கொடூர நோய்..! மூளைக்கும் பரவிய கொடூரம்! 4 வயதில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்!

ஃபுளோரிடா: அமெரிக்க சிறுவன் ஒருவன், விநோதமான ரத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.


அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவின் ஜென்சன் பீச் பகுதியை சேர்ந்தவர் கிரேஸன் ஹெய்ன்லி. 4 வயது சிறுவனான, கிரேஸன் பிறக்கும்போதே ஒருவகையான உடல் ஒவ்வாமையில் பாதிக்கப்பட்டிருப்பதாக, மருத்துவர்கள் கண்டறிந்தனர். அத்துடன், சிறுவனின் சருமம் நாளுக்கு நாள் நிறம் மாறுவதையும், அவனது மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் தெரிந்துகொண்டனர்.

இதற்குள் சிறுவனுக்கு, 4 வயது கடந்துவிட்டது. சமீபத்தில் கடும் உடல்நல பாதிப்படைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனை மீண்டும் பரிசோதித் மருத்துவர்கள், அரிய வகை ரத்த நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக, உறுதிப்படுத்தினர்.  

hypereosinophilic syndrome எனக் கூறப்படும் அந்த நோய் பாதிப்பு காரணமாக, சிறுவனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் திடீரென செயல்படுவதை நிறுத்திவிடும். இதனை சரிசெய்ய பல விதமான அறுவை சிகிச்சைகளை சிறுவனுக்குச் செய்து வருகின்றனர். ஆனாலும் உடல்நலம் தேறவில்லை. இந்த பாதிப்பிற்கு உரிய சிகிச்சை முறை எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், எந்நேரமும் சிறுவன் உயிரிழக்கலாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய நிலையில், சிறுவனின் உடலில் உள்ள திசுக்கள், மற்றும் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாக இறக்க தொடங்கியுள்ளன. இது சிறுவனை மட்டுமின்றி, அவனது பெற்றோரையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.