தந்தை உதவியுடன் சிறுவனுக்கு செக்ஸ் சீண்டல்! வேலைக்காரனை கண்டுபிடித்து அதிர்ந்த தாய்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

4 வயதுச் சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிலையில் சிறுவனின் தந்தை உள்ளிட்டோர் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மராட்டியத்தின் தலைநகர் மும்பையில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மலபார் ஹில்சைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் தாய் ஒரு வழக்கறிஞர். வீட்டுப் பணியாள் தன் மகனிடம் முறைகேடாக நடப்பதக அவருக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. இந் நிலையில் ஒருமுறை தனது மகனை அந்த நபர் தவறான முறையில் தொட முயற்சிப்பதை நேரிலேயே கண்டு தடுத்துவிட்டார். 

இதையடுத்து தனது மகனிடம் அவர் விசாரித்த போது அந்தச் சிறுவன் தனக்கு நேர்ந்த அத்துமீறலை விவரித்ததாகக்  கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் தனது கணவன் அவரது பெற்றோர் உள்ளிடோரிடம் தெரிவித்தார். ஆனால் அதனை நம்பாத அவர்கள் அந்த நபரை தொடர்ந்து வீட்டில் பணிபுரிய அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வேறு வழியின்றி காவல்நிலையத்தை அணுகிய அந்தப் பெண், தொடர்புடைய பணியாள், தனது கணவன், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் தொடர்புடைய அனைவர் மீதும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சிறுவனின் தந்தை உதவியுடனேயே இந்த பாலியல் அத்துமீறல் நடைபெற்றதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் இது பொய் புகார் என்றும் தங்களை பழிவாங்க இப்படி தனது மனைவி செய்வதாகவும் கணவன் கூறியுள்ளார்.