4 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து..! காமுகன் செய்த செயல்! பிறகு நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

திருப்பூரில் குடிபோதையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.


திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி இவர் அதே பகுதியில் கட்டிட கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனியே வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் இதையடுத்து சிறுமி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து பார்த்துள்ளனர்.அப்போது கந்தசாமி குடிபோதையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை பார்த்த பொதுமக்கள் அவரை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்துள்ளனர். 

பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கந்தசாமியை கைது செய்து அவர் மீது பாலியல் குற்ற பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.