டெங்குவால் பலியான சிறுமி! கொசு உற்பத்திக்கு காரணமான பள்ளிக்கூடம்! வேலூர் அதிர்ச்சி!

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுமி படித்த பள்ளியில் கொசு பரவுவதற்கான சாத்தியகூறுகள் இருந்ததால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள பள்ளிகொண்டா எனும் இடத்திலுள்ள அம்பேத்கர் நகரில் சரன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் நட்சத்திரா. 4 வயதான நட்சத்திரா அதே பகுதியில் உள்ள சிக்ஷா கேந்திரா மெட்ரிக் பள்ளியில் யுகேஜி வகுப்பு படித்து வந்தார்.

15 நாட்களுக்கு முன்னர் நட்சத்திராவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாமல் இருந்ததை அடுத்து அவரை சி.எம்.சி என்ற தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் நட்சத்திராவை காப்பாற்ற இயலவில்லை. நேற்று இரவு நட்சத்ரா உயிரிழந்துவிட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைரல் காய்ச்சல் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்துள்ளனர். ஆனால் வாய் வார்த்தையாக டெங்கு காய்ச்சல் என்று கூறியுள்ளனர்.

உடனடியாக அரசாங்கத்தினர் நட்சத்திர படித்து வந்த பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர். தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பங்கெடுக்க, தேங்கிய தண்ணீர் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். டெங்கு காய்ச்சல் பரவுவது அதற்கான அனைத்து சாதகமான சான்றுகள் இருந்ததால் அரசாங்கத்தினர் அந்த பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். 

இன்று மாலைக்குள் அபராதத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். மேலும் அதற்குள் பள்ளியும் சுத்தமாகி விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.