4 வயது குழந்தையை உயிருடன் தின்று விழுங்கிய பன்றிகள்..! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் 4 வயது குழந்தையை காட்டுப்பன்றிகள் தின்று கொலைசெய்த சம்பவமானது ஹைதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநகருக்கு அருகே சைதாபாத் என்று இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சிங்காரேனி காலனியில் ஹர்ஷவர்தன் என்ற 4 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். சம்பவத்தன்று மாலை நேரத்தில் விளையாட சென்ற ஹர்ஷவர்தனை சிறிது நேரத்திற்கு பின்னர் காணவில்லை.

பெற்றோர் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அனைவரும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு பன்றிகளின் கால் தடயத்தை தொடர்ந்து அனைவரும் சென்றனர். இறுதியில் உடல் பாகங்கள் சிதறி குழந்தையின் உடல் வீசி எறியப்பட்ட பகுதிக்கு அனைவரும் சென்றனர்.

அங்கிருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை அடையாளம் காட்டுவதற்காக ஹர்ஷவர்தனின் பெற்றோரை அழைத்தனர். தங்களுடைய மகன் இறந்து கிடந்ததை கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.

உடனடியாக காவல்துறையினர் உடலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மருத்துவம் சிறிது நேரம் சோகத்தை ஏற்படுத்தியது.

அக்கம்பக்கத்தினர் கூறுகையில், "ஆக்கிரமிப்பு காட்டுப்பன்றிகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் எத்தனையோ முறை முறையிட்டோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தினாளேயே ஹர்ஷவர்தனின் உயிர் பிரிந்தது" என்று கூறினர்.

பாலாலா ஹக்குவா சங்கத்தினர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். அதாவது இறந்த சம்பவத்திற்கு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்று குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது ஹைதராபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.