மிரட்டும் பருவ மழை! 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க உள்ள நிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


சுமார் ஏழு நாட்கள் தாமதத்திற்கு பிறகு கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இதனால் கேரள மாநில பேரிடர் மேலாண்மைத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை துவங்கியது முதலே தீவிர கனமழை முதல் அதிதீவிர கனமழை வரை கேரளாவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் 4 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில தேசிய பேரிடர் மேலாண்மை துறை செயலர் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று முதலே பருவமழை தொடங்கினாலும் அதன் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனது பெரும் கன மழையை எதிர் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த நான்கு மாவட்ட மக்களும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் கொட்டி தீர்த்த கன மழையால் சுமார் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவே தற்போது ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பருவ மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளது.