ஒரே பிரசவத்தில் ஒட்டிப் பிறந்த 4 சகோதரிகள்! 4 பேருக்கும் ஒரே நாளில் டும்டும்டும்! தன்னந் தனியாக நெகிழ வைத்த தாய்!

கேரளா மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்து அவர்களில் 4 பேருக்கு ஒரே நாளில் திருமணம் நடக்கப்போவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் 1995-ஆம் ஆண்டில் ராம்குமார் என்பவர் ரமாதேவி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தைகள் அனைத்தும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்ததால் பெற்றோர் அவர்களுக்கு முறையே உத்ரஜா, உதரா, உதாரா, உத்தமா, உத்ராஜன் ஆகிய பெயர்களை வைத்தனர்.

ராம்குமார் எதிர்பாராவிதமாக அவருடைய பிள்ளைகளின் 9-வது வயதில் உயிரிழந்தார். அதன் பின்னர் ரமாதேவி சிரமப்பட்டு குழந்தைகளை வளர்த்துள்ளார். 4 சகோதரிகளில் ஒருவர் ஆடை வடிவமைப்பாளராகவும், 2 பேர் மயக்க மருந்து நிபுணர்களாகவும், மற்றொருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியன்று ஒரே மேடையில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்ராஜன் செய்துவருகிறார். 

இந்த செய்தியானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.