ஒரே ஸ்கூல்..! ஒரே வகுப்பு..! 10ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் செய்த செயல்! வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்த பெற்றோர்! என்னாச்சு தெரியுமா?

பள்ளிக்கு சென்ற 4 மாணவிகள் பெங்களூருவுக்கு தப்பி சென்றபோது காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே பட்டாபிராம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் திங்கட்கிழமையன்று பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். 

பள்ளி முடிந்து நெடுநேரமான பிறகும் மாணவிகள் வீட்டிற்கு வராததை உணர்ந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவிகளை வலைவீசி தேடி வந்தனர். தேடுதல் வேட்டையின் போது, மாணவிகள் பெங்களூர் ரயில் நிலையத்தில் தன்னந்தனியாக இருப்பதாக பட்டாபிராம் காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உடனடியாக அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவிகளை காப்பாற்றியுள்ளனர்.

பின்னர் மாணவிகள் பட்டாபிராம் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் திடீரென்று மாயமாவதற்கான காரணங்களை கேட்டறிந்தனர். அதற்கு அந்த மாணவிகள், "வீட்டில் பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பதால் இந்த முடிவை எடுத்தோம். எங்களால் அவர்களுடன் வாழ இயலாது" என்று கூறியுள்ளனர்.

பிறகு காவல்துறையினர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பட்டாபிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.