பூட்டிய வீட்டுக்குள் கணவன் - மனைவி மற்றும் குழந்தைகளின் சடலம்! பிரேதப்பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்து சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் ராஜ்கங்பூர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு ரஞ்சித் பிரசாத் என்ற 35 வயது நபர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் அல்பனா. இவரின் வயது 30. இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 18 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

நேற்று முன்தினம் இவர்கள் தங்களுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் பால் பாத்திரம் கிடந்ததால், பாலில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்த பின்னர் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதினர். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர்களின் உடலில் விஷமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 4 பேரும் மூச்சு திணறிய உயிரிழந்தனர் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆகையால் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உறுப்புகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகுதான் அவர்கள் எவ்வாறு மூச்சுத்திணறி இறந்தனர் என்பது குறித்து அறியப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.