4 மாத குழந்தை சிறுநீரகத்தில் கொத்தாக கற்கள்! கண்டுபிடித்த டாக்டர்கள்! திக்..திக்.. ஆப்பரேசன்! பிறகு நடந்த அதிசயம்!

ஐதராபாத்: மிக அரிதான சம்பவமாக, ஐதராபாத் மருத்துவர்கள், 4 மாத குழந்தைக்கு சிறுநீரகக் கல் நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.


ஐதராபாத்தில் உள்ள ப்ரீத்தி யுரோலாஜி அண்ட் கிட்னி ஹாஸ்பிடலில், சமீபத்தில் புதியதாக பிறந்த 4 மாத கைக்குழந்தை, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், 9 மிமீ அளவுக்கு, அதற்கு சிறுநீரக கல் இருப்பதாகக் கண்டறிந்தனர்.

உடனடியாக, அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்க, டாக்டர்கள் தீர்மானித்து, சிகிச்சையை தற்போது வெற்றிகரமாக செய்தும் உள்ளனர். உலகிலேயே, மிகக் குறைந்த வயதில் சிறுநீரகக் கல் நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் என்ற பெருமையை, அந்த கைக்குழந்தை பெற்றுள்ளது. குழந்தைக்கு, சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

நீர்ச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, அதிக உப்பு பயன்படுத்துவது, அதிக அளவில் இறைச்சி சாப்பிடுவது போன்றவை காரணமாக இந்தியர்களுக்கு சிறுநீரகத்தில் கல் பாதிப்பு உருவாகிறது. இது வயதானவர்களை காட்டிலும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் புதியதாக பிறக்கும் குழந்தைகள் பலரும் சமீப காலமாக, சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் பிறப்பது அதிகரித்து காணப்படுகிறது.