4 மாத கர்ப்பிணி! அதுவும் மாற்றுத்திறனாளி! நடுரோட்டில் சிதைத்த கும்பல்! பதற வைக்கும் சம்பவம்!

மாற்றுத்திறனாளி கர்ப்பிணியை மர்மநபர்கள் கடுமையாக தாக்கியுள்ள சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலத்தில் நம் நாட்டில் குழந்தை கடத்தல் தலைவிரித்தாடுகிறது. இதனை தவறாக புரிந்து கொண்டு சிலர் அப்பாவி பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதேபோன்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

வடக்கிழக்கு டெல்லியில் ஃபரிதாபாத் எனும் நகரம் அமைந்துள்ளது. இங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 4 மாத கர்ப்பிணியும் கூட. தன்னுடைய கணவர் வீட்டில் ஏற்பட்ட தகராறினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

வீட்டை விட்டு வெளியேறிய பிறகு செல்வதற்கு இடமில்லாததால் பிளாட்ஃபாரத்தில் தங்கி வந்தார். மாற்றுத்திறனாளியாகவும், கர்ப்பிணியாகவும் இருப்பதனால் அவர் மீது இறக்கப்படும் சிலர் அவருக்கு உணவளித்து வந்தனர்.

இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கு அவர் குழந்தை கடத்தல் செய்பவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. 27-ஆம் தேதியன்று மர்ம கும்பல் அந்த பெண்ணை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளி என்பதால் அந்த பெண்ணால் தன்னை தற்காத்து கொள்ள இயலவில்லை. மேலும் அவர்களை தாக்கவும் இயலவில்லை. 

இந்த கொடூர சம்பவத்தை அப்பகுதியிலிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் வீட்டிலும் இந்த வீடியோவை கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் காவல்துறையினரிடம் சென்று நிகழ்ந்தவற்றை கூறினர்.

பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனிதநேயம் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளத்தை காவல்துறையினரால் தற்போது வரை கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்துவதாக காவல்துறை ஆணையர் உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவமானது வடகிழக்கு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.