அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை..! நான்கு நிமிடத்தில் 51 பேர்..! அசர வைத்த அகிலா..! பரபர வீடியோ உள்ளே!

திருவனந்தபுரம்: மிமிக்ரி செய்பவர்களில் ஆண்கள் ஆதிக்கம் செய்து வரும் சூழலில், அதற்கு சவால் விடும் வகையில் கேரள பெண் ஒருவர் முன்வந்துள்ளார்.


மலையாளத்தில் ஒளிபரப்பாகும் ஃபிளவர்ஸ் டிவியில் சமீபத்தில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி  Comedy Utsavam என்ற பெயரில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அகிலா என்ற இளம்பெண், வெறும் 4 நிமிடங்களில், கமல்ஹாசன் தொடங்கி உம்மன் சாண்டி வரை மொத்தம் 51 பேரின் குரல்களை அநாயசமாக மிமிக்ரி செய்து காட்டினார்.

இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு, இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவரான அகிலா தற்போது ஆயுர்வேத மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவர், பள்ளிப்படிப்பு காலத்தில் இருந்தே மிமிக்ரி செய்வதில் விடாமல் முயற்சி செய்தவர், தற்போது சிறப்பாக பலகுரல் கலைஞராக மாறியுள்ளார். பள்ளி காலத்திலேயே நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார்.

அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள் வரை..! நான்கு நிமிடத்தில் 51 பேர்..! அசர வைத்த அகிலா..! பரபர வீடியோ உள்ளே!குறிப்பாக, பெண் குரலில் இருந்து எந்த பிசிறும் காட்டாமல் அப்படியே ஆண் குரலுக்கு, அவர் மாறி இயல்பாக, அதுவும் அச்சு அசலாக ஆண் போலவே பேசுவதுதான் இதில் மிகவும் வியப்பான விசயமாகும். இவருக்கு எதிர்காலத்தில் மலையாள சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கலாம் என, பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர்.

மலையாள மொழியை பொறுத்தவரையிலும் மிமிக்ரி செய்யும் பலர் சினிமா நடிகராக மாறிவிடுவார்கள். ஜெயராம், திலீப் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க நடிகர்கள் ஆவர். அதுபோல, அகிலாவும் நடிகையாக வர வாய்ப்புள்ளதாக, அவரது நண்பர்கள், உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.