நண்பனின் மனைவியை அடைய 4 பேர் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்..! நடு ராத்திரியில் வீடு புகுந்து மாறி மாறி கற்பழித்த கொடூரம்! சினிமாவை விஞ்சிய சம்பவம்!

நண்பனின் மனைவி என்றும் பாராமல் துப்பாக்கி முனையில் நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரேலி என்ற நகர் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சிரௌலி என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் வசித்து வந்தார். பெண்ணின் கணவருக்கு 4 நண்பர்கள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் அந்த இளம்பெண் மீது ஒரு ஆசையிருந்தது. அவரை எப்படியாவது அடையவேண்டும் என்று யோசித்து பிளான் செய்து வந்தனர்.

இதற்கு முதலில் தடையாக இருக்கும் அந்த பெண்ணின் கணவரை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவருக்கு தெரியாமல் 1 கிலோ போதை பொருளை அவருடைய வண்டியில் வைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் ஏதுமறியாத அந்த அப்பாவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் 4 பேரும் நுழைந்துள்ளனர். அப்போது கத்தி முனையில் அந்த பெண்ணை கொலை செய்வதாக மிரட்டி, 4 தேரும் அவரை பலவந்தப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

ஆசை தீர அந்த பெண்ணை அனுபவித்து விட்டு, கொலை செய்துவிட வேண்டும் என்று எண்ணினர். அதிலிருந்த அந்தப்பெண் தப்பித்து கூச்சலிட தொடங்கினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை உணர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும் இந்த விவகாரம் குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தால், தேடி வந்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பியுள்ளனர்.

2 நாட்கள் கழித்து ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்ட அந்த பெண் காவல்நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 4 பேரையும் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.