திருநங்கைகளுடன் அதுக்கு பேரம்! தட்டிக் கேட்ட போலீசுக்கு அடி உதை! வைரல் வீடியோ!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காவலர் ஒருவரை மது போதையில் 4 பேர் தாக்கிய சம்பவமானது அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் பெயர் கார்த்திகேயன். இவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் காண்ஸ்டபுல் ஆக பணிபுரிந்து வருகிறார். 13-ம் தேதி இரவன்று இவர் நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது சாலையோரத்தில் இருந்த சில திருநங்கைகளிடம் 4 பேர் அவதூறாக பேசி தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இதனை கண்ட கார்த்திகேயன் அந்த 4 பேரையும் எச்சரித்து அந்த இடத்திலிருந்து கிளம்ப சொன்னார். ஆனால் அவர்கள் தாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி, அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிச்சலடைந்த கார்த்திகேயன் லத்தியின் மூலம் தாக்க முற்பட்டார். லத்தியை பிடுங்கிய 4 பேர் கார்த்திகேயனை தாக்கினர். கார்த்திகேயன் தன்னிடமிருந்த வாக்கி-டாக்கியை உபயோகித்து அருகில் இருந்த பிற காவலர்களை அழைத்துள்ளார். அந்த வாக்கி-டாக்கியையும் 4 பேர் உடைத்த நொறுக்கியுள்ளனர். சிறிது நேரத்தில் ரோந்தில் இருந்த பிற காவலர்கள் அங்கு வந்து நால்வரையும் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த  4 பேர் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த முகமது ரிஸ்வான், சுலைமான் என்பவர்களும், ராயபுரம் பகுதியை சேர்ந்த முகமது அக்பர், முகமது நவ்ஷத் என்பவர்களும் ஆவர். மேலும் விசாரணையில் இவர்கள் வழக்கறிஞர்கள் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களை சிறையிலடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது நுங்கம்பாக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.