ஒரே பைக்கில் மகன், அண்ணன் மகள்! அக்காள் மகள் என 4 பேருடன் ரோடு கிராசிங்! அதிவேகத்தில் வந்த கார்! பிறகு நேர்ந்த பயங்கரம்!

ஒரே பைக்கில் மகன், அண்ணன் மகள், அக்காள் மகள் , என மொத்தம் நான்கு பேர் ஒன்றாக சென்ற பொழுது நான்கு வழி சாலையில் அதிவேகமாக கார், இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.


நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடிக்கு அருகே சிங்கநெரி என்ற கிராமம் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் விவசாயம் வேலை பார்க்கும் கண்ணன் (வயது 45) என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகள் பெயர் காவியா. இவர் பெருமளஞ்சி ஊரில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்றும் அதனை அவரவர் தங்களது பள்ளிகளிலேயே சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.

இதனையடுத்து பத்தாம் வகுப்பு பயின்று வரும் காவியா தன்னுடைய மாமா கண்ணன் உடன் இணைந்து தனது ஹால் டிக்கெட்டை பெறுவதற்காக செல்ல இருந்தார். இதனை அடுத்து கண்ணன் மற்றும் காவியக் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்ல உள்ளனர் என்பதை அறிந்த அவரது மகன் சபரீசன் தானும் தந்தையுடன் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வரப்போவதாக கூறியிருக்கிறார். மேலும் அவரது அண்ணன் மகளான மனிஷாவும் அடம்பிடித்து கண்ணனுடன் செல்ல தயாராகி இருக்கிறார். ஆகமொத்தம் கண்ணன், அவரது அக்காள் மகள் காவியா, அவரது அண்ணன் மகள் மனிஷா , மேலும் அவரது மகன் சபரீசன் என நால்வரும் ஒரே பைக்கில் பயணித்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து காவியாவின் பள்ளிக்கு சென்று அவரது ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்ப முற்பட்டுள்ளனர். வீட்டிற்கு திரும்பும் வழியில் நான்கு வழிச்சாலையை அவர்கள் கடந்து வரவேண்டும். அந்த சாலையை கடந்து வந்த பொழுது எதிர்திசையில் அதிவேகமாக வந்த கார் இவர்கள் நால்வரும் பயணித்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்பொழுது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கண்ணன் அவரது அண்ணன் மகள் மனிஷா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவியான காவியா மற்றும் கண்ணனின் மகனான சபரீசன் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி கண்காணிப்பில் உள்ளனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.