ரகசிய அறையில் கட்டு கட்டாக ரூ.500, 1000 நோட்டு..! கத்தை கத்தையாக ரூபாய் நோட்டு போன்ற காகிதம்..! திமுக பிரமுகரை வலைவீசி தேடும் போலீஸ்!

கோயம்புத்தூரில் பழைய 500, 1000 ரூபாய்களை வைத்து அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவையில் உள்ள பொம்மனாம்பாளையம் லட்சுமி நகரில் திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு ஒரு சொகுசு பங்களா உள்ளது. அந்த பங்களாவில் ரஷீத் என்பவர் வாடகைக்கு இருந்த வந்தார். ரஷித் என்பவரிடம் கரும்பு கடையை சேர்ந்த பெரோஸ் , ஷேக் என்பவர்கள் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தங்களிடம் பழைய 500 ,1000 பணம் மதிப்பு இழப்பீட்டு செய்யப்பட்ட ரூபாய்கள் இருப்பதாக கூறி, புதிய நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக இரண்டு மடங்கு பணம் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ரஷீத் தங்கியிருந்த சொகுசு பங்களாவுக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவலை தெரிவித்தனர். இதனால் போலீசார் அந்த சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். சோதனையின்போது சொகுசு பங்களாவில் இருந்த பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கின. இந்த சோதியின் போது சுமார் 268 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

இந்த ரூபாய் நோட்டுகளுக்கு அடியில் போலியான பேப்பர் நோட்டுகளையும் அவர்கள் அடிக்கி வைத்ததையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். இதன்மூலம் போலீசார் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் அந்த கும்பலிடம் இருந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த கும்பல் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி கமிஷன் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வடவள்ளி போலீசார் இதில் சம்பந்தப்பட்ட ரஷீத் ,பெரோஸ், ஷேக் மற்றும் திமுக பிரமுகரான ஆனந்தன் ஆகியோர் மீது போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது மற்றும் பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு பதிவு செய்யபட்ட நான்கு பேரும் போலீசில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று தலைமறைவாக இருந்து வருகின்றனர். தற்போது போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் ஏமாற்றப்பட்ட யார் யார் வேண்டுமென்றாலும் வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.