4 பெண்கள் மது போதையில் காரை ஓட்டிய சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு போதை! அதிவேகம்! கார் ஓட்டிய 12 வயது சிறுமி! உள்ளே இருந்தவர்களை பார்த்து அதிர்ந்த போலீஸ்!
அமெரிக்கா நாட்டில் நியூ மெக்ஸிகோ என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட அல்மாகார்டோ நகரில் அதிவேகமாக கார் சென்று கொண்டிருந்தது. காவல்துறையினர் காரை தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறையினர் துரத்துவதை கண்ட பெண் தன்னுடைய காரை மேலும் வேகமாக ஓட்டியுள்ளார்.
அப்போது அவ்வழியே சென்ற 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி உள்ளார். இறுதியாக வேகக்கட்டுப்பாட்டை வைக்கப்பட்டிருந்த பலகையின் மீது மோதி கார் நின்றது.
போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து சென்று காரை தடுத்து நிறுத்தினர். காரின் ஓட்டுநரை கண்டவுடன் காவல்துறையினர் பேரதிர்ச்சி அடைந்தனர். 12 வயது சிறுமி மதுபோதையில் கார் அதிவேகமாக ஓட்டியுள்ளார். காரினுள் மேலும் 3 சிறுமிகள் மதுபோதையில் இருந்துள்ளனர்.
உடனடியாக 4 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது காரை ஓட்டி வந்த சிறுமி, "என்னுடைய தாத்தாவின் காரை திருடி வந்தேன். மேலும் தோழிகளுடன் மது அருந்தி காரை வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தேன். அப்போதுதான் காவல் துறையினரிடம் பிடிபட்டேன்" என்று கூறினார்.
4 சிறுமிகளின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் தங்கள் வீட்டில் மது இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.