உங்கள் உடல் எப்படி உள்ளது? கண்காணிக்கும் சென்சார் டிரஸ்! சத்தியமங்கலம் மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக கல்லூரி மாணவிகள் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.


உலகம் செல்கின்ற வேகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவுள்ளது. அவர்களால் சரிவர தங்களுக்கு நேர்கின்ற சிரமங்களை பிறரிடம் எடுத்துரைக்க இயலவில்லை. அவ்வாறு என்றாலும் பிறர் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு பண்ணாரி தொழிநுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலையை  கண்காணிப்பதற்காக இந்த கல்லூரியை சேர்ந்த சுஷ்மிதா, சன்மதி, விஷாலி, தனஸ்ரீ ஆகிய 4 மாணவிகள் பிரத்தியேகமான ஆடையை வடிவமைத்துள்ளனர்.

இந்த ஆடையானது ஆட்டிஸம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அழுத்தம், சுவாச நிலை, இதயத்துடிப்பு முதலியவற்றை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடையில் உபயோகித்துள்ள மின்னணு சாதனங்கள் செல்போன் ஆப்களின் மூலம் குறித்த மருத்துவ தகவல்களை அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், குடும்ப மருத்துவர்களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் இந்த கண்டுபிடிப்பானது முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளது. ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இந்த பரிசு பெற்றுள்ளது.