சீறிய நாகப்பாம்பு! சுற்றி வளைத்த நான்கு பூனைகள்! பட்டப்பகலில் நடுரோட்டில் அரங்கேறிய திகில் சம்பவம்!

மும்பை: பாம்பு மீது 4 பூனைகள் சீறிப் பாய்ந்து சண்டையிடும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் நீல் நிதின் முகே இதுதொடர்பாக, இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  படமெடுத்து நிற்கும் நல்ல பாம்பை சுற்றிலும் 4 பூனைகள் நிற்பதை காண முடிகிறது. 4 பூனைகளும் ஆக்ரோஷமாக பார்க்க, அதில் ஒரு பூனை மட்டும் ஓங்கி அடிக்க, அதனை பாம்பு சமாளித்து தன் பங்குக்கு, சீற்றத்தை வெளிப்படுத்தியபடி, அங்கிருந்த எஸ்கேப் ஆக, என வீடியோ முழுக்க, பார்ப்பதற்கு ஒரே திரில்லிங்காக உள்ளது.  

இதுபற்றி கமெண்ட் பகிர்ந்துள்ள முகேஷ், இன்றைய நாள் காலையில் #BypassRoad பகுதியில் BGM சென்றபோது எடுத்த வீடியோ இது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய இயற்கையான காட்சி கிடைப்பது அரிது என்பதால், சமூக ஊடகங்களில் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.