தலையில் துண்டு! அரை நிர்வாணம்! உத்தமபாளையத்தை கலக்கும் ஜட்டி கொள்ளையர்கள்! பீதியில் பெண்கள்!

உத்தமபாளையம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


சமீப காலங்களில் உத்தமபாளையம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் இதனை கட்டுப்படுத்த அவர்களால் இயலவில்லை. ஆனாலும் காவல்துறையினர் அயராது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தமபாளையத்திற்கு உட்பட்ட உ. அம்மாபட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியை சேர்ந்த ராமையா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே சென்றனர். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு "திருடன் திருடன்' என்று கூச்சலிட்டனர். பயந்துபோன திருடர்கள் அந்த வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவமறிந்த காவல்துறையினர் அக்கம்பக்கத்து வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது கையில் கத்தி மற்றும் சில ஆயுதங்களுடன் வடமாநிலத்தவர்களை போன்று 4 பேர் வீட்டிற்குள்ளே செல்வது தெரியவந்துள்ளது.

அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் சந்தேகிக்கும் படி வெளிமாநில தவறுகளைக் கண்டால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் எளிதாக வீட்டில் நுழைவதால் பொதுமக்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் அயராது ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த சம்பவமானது உத்தமபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.