நான்கரை நிமிடத்தில் 150 திருக்குறள்! கலெக்டரையே அசர வைத்த 3ம் வகுப்பு மாணவி! புதிய சாதனை!

3-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 289 வினாடிகளில் 150 திருக்குறள்களை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ள சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லாங்குத்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆனைக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது தர்ஷினி 3-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கல்லாங்குத்து அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

தொடக்கத்திலிருந்தே திருக்குறள் ஒப்புவித்தலில் தர்ஷினி திறம்பட செயல்பட்டார். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது ஐந்து நிமிடத்தில் 27 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தார். தன்னுடைய திறமைகளை மேம்படுத்திக் கொண்ட தர்ஷினி 2-ஆம் வகுப்பில் 4 நிமிடங்களில் 110 திருக்குறள்களை ஒப்புவித்தார்.

பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து தர்ஷினியை ஊக்கப்படுத்தி அதன்படி சமையலுக்கு 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 திருக்குறள்களை ஒப்புவித்துள்ளார். இந்த சம்பவமானது உலக சாதனையாக கருதப்படுகிறது. தர்ஷினியை கௌரவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் தர்ஷினிக்கு தங்க மெடலையும், சிறிய கோப்பையையும், சாதனைக்கான சான்றிதழ்களையும் பரிசாக வழங்கினார்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.