ஜலபுல ஜங் செய்யலாம் வா! இளம் பெண்ணை அழைத்த மீன் வியாபாரிக்கு நேர்ந்த பரிதாபம்!

உல்லாசமாக இருக்க அழைப்பு விடுத்த, மீன் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் உள்ள ஹள்ளி ரோஷன் நகரில் வசித்து வந்தவர் ஜரார். 38 வயதான இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தினரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரது குடும்பமும் மிக நெருக்கமாக இருந்த நிலையில், சமீபத்தில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் 2 குடும்பமும் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், மீன் வியாபாரியான ஜரார் மட்டும், அக் குறிப்பிட்ட பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர் கண்ணில் படும்போது எல்லாம், செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் வா, வா, என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இதனை அப்பெண் மறுத்து வந்தாலும், தனது குடும்பத்தினரிடம் புகார் கூறியுள்ளார். 

இந்நிலையில், சில நாள் முன்பாக, ஜரார் இதேபோல பேச, அந்த பெண், அவரை தகாத முறையில் திட்டியிருக்கிறார். இதில், ஆத்திரமடைந்த ஜரார், நள்ளிரவு நேரம் குடிபோதையில் பெண்ணின் வீட்டிற்கு முன் வந்து திட்டியுள்ளார். வேறு வழியின்றி, இதுபற்றி தனது கணவர், சகோதரர்களிடம் அப்பெண் தகவல் தெரிவித்துள்ளார்.  

அவர்கள் அனைவரும் ஜரார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, அதிகாலையில், வந்து, அவரை சராமரியாக வெட்டிக் கொன்றனர். இச்சம்பவம் தெரியவந்ததும் விரைந்து வந்த போலீசார், அவர்களை கைது செய்ததோடு, ஜராரின் சடலத்தை கைப்பற்றினர். விளையாட்டாக ஆரம்பித்த விஷயம், வினையாக முடிந்ததாகக் கூறி, பெங்களூரு வாசிகள், இவ்விவகாரம் பற்றி பரபரப்பாக பேசி வருகிறார்கள்.