முகிலனுடன் ஒரே அறையில் தங்கினேன்! உறவு கொண்டேன்! ஆதாரம் இருக்கிறது! வெளியிடவா? இளம் பெண் பகீர் பேட்டி!

சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீதான பாலியல் புகாரை ஆதாரத்துடன் நிரூபிக்கப் போவதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.


ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வந்த முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது முதல் மாயமானார். இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்  கடந்த 2017-ஆம் ஆண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் போராட்டத்தில் முகிலனுடன் இணைந்து பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளர்.

இருவரும் ஒரே விடுதியில் தங்கியதாகவும், அப்போது திருமண ஆசை காட்டி அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். அதன் பிறகு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

கடந்த இரு தினங்களுக்கு முன் ஆந்திர போலீசாரால் மீட்கப்பட்ட முகிலன், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு சரியான சிலையில் சென்றுகொண்டிருப்பதாகவும், பாலியல் வழக்கில் முகிலனுக்கு எதிரான ஆதாரங்களை காட்டி குற்றத்தை நிரூபிக்கப் போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஆனால் புகாரை மறுத்துள்ள முகிலனும் , அவரது மனைவி பூங்கொடியும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுப்பதால் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான புகார்கள் ஜோடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.