எய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் இளம் பெண் கற்பழிப்பு! காமுகனுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

எச்ஐவி நோயாளி என்றும் பாராமல், 37 வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.


மும்பையில் உள்ளது லோகமான்யா திலக் முனிசிபல் ஜெனரல் ஹாஸ்பிடல். இது உள்ளூர் மக்களால், சியான் மருத்துவமனை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு, பெண் ஒருவர் சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் துணையாக, 37 வயதான அவரது அக்காவும் உடன் இருந்துள்ளார். 

இவர் எச்ஐவி பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில், அவரை மர்ம நபர் ஒருவர் மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு பலாத்காரம் செய்துள்ளார்.   இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்கவே, உடனடியாக, போலீசார் 31 வயதான ஒரு நபரை கைது செய்தனர்.

விசாரணையில், மருத்துவமனையில் உள்ள செக்யூரிட்டி பாதுகாப்பையும் மீறி, உள்ளே நுழைந்த அந்த நபர், வார்டு பாய் போல நடித்து, குறிப்பிட்ட பெண்ணை, எச்ஐவி சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, மேல்மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கே வைத்து, பலாத்காரம் செய்ததாக, தெரியவந்துள்ளது.

தான் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிய பிறகும் அந்த காமுகன் தன்னை விடவில்லை என்று பெண் கண்ணீருடன் கூறியுள்ளார். அந்த இளைஞனை போலீசார் தற்போது எய்ட்ஸ் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று, சியான் மருத்துவமனை டீன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பரபரப்பு நிறைந்த சியான் மருத்துவமனையில் சிசிடிவி கேமிரா கண்காணிப்பையும் மீறி, இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.