20 வயதில் நடிக்க ஆரம்பித்தவர்! 35 வயதுக்குள் நயன்தாராவின் வாழ்வில் எத்தனை ஆண்கள் தெரியுமா?

நடிகை நயன்தாரா இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஆனால் கடந்த 15 வருடங்களில் திரையுலகில் அவர் கடந்து வந்த பாதையில் பலரையும் நம்பி ஏமாந்துள்ளார்.


2003ம் ஆண்டு நடிக்க ஆரம்பித்தாலும் 2004ம் ஆண்டு வெளியான நாட்டுராஜாவு படத்தின் மூலமாகத்தான் நயன்தாரா அனைவராலும் அறியப்பட்டார். அந்த படத்திற்கு பிறகு தான் தமிழில் அய்யா, சந்திரமுகி படங்களில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்தது- 

இந்த நிலையில் தமிழில் நயன்தாரா நடிக்க ஆரம்பித்த சமயத்தில் இயக்குனர் ஷாஜி கைலாசுடன் அவர் தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. நாட்டுராஜாவு படம் மூலம் நயன்தாராவை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஷாஜி கைலாஸ் இதனை கூறியே அவரை பயன்படுத்தி வந்ததாகவும் பேசப்பட்டது.

இதனை புரிந்து கொண்டு நயன்தாரா அவரிடம் இருந்து ஒதுங்கினார். இந்த நிலையில் சந்திரமுகி வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து தவறான படங்களை தேர்வு செய்தார். இதனால் அவரின் திரையுலக வாழ்வே கேள்விக்குறியானது. அப்போது அடுத்தடுத்து ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா நயன்தாராவை கள்வனின் காதலி படத்தில் ஒப்பந்தம் செய்தார்.

இதனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவும் – நடிகை நயன்தாராவும் டேட்டிங் சென்றதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் இதனை நயன்தாரா பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இருவரு திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது.

அப்போது தான் சிம்புவுடன் நயன்தாரா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனை வெளியிட்டதே சிம்பு தான் என தெரிந்து அவரிடம் இருந்து நயன்தாரா விலகினார். அப்போது அவருக்கு அறிமுகம் ஆன பிரபுதேவாவிடம் தனது மனதை பறிகொடுத்தார் நயன்தாரா. தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சைக் குத்தினார். நயன்தாராவிற்காக தனது மனைவியை விவாகரத்து செய்து பிரபுதேவா.

இதே போல் நயன்தாராவும் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். ஆனால் பிரபுதேவா நயன்தாராவை வைத்து இயக்கிய வில்லு படம் படு தோல்வி அடைந்தது- தொடர்ந்து தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க அவர் மறுத்தார். இதனால் அவரிடம் இருந்தும் நயன்தாரா பிரிந்தார்.

பிரபுதேவாவிற்கு பிறகு எந்த நடிகருடனும் நடிகை நயன்தாரா நட்பு பாராட்டவில்லை. மேலும் ஆண்களே மோசம் என்கிற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்தன. இந்த நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். அந்த காதல் தற்போதும் தொடர்கிறது-