புயலை எதிர்கொள்ள 38ஆயிரம் பேரை தயார் செய்த எடப்பாடி அரசு! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் செம கெத்து!

தமிழகத்தை புயல் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலான்மை ஆனையர் சத்ய கோபால் தெரிவித்தார்.


சென்னையில் உள்ள பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனவர்கள் 28ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவித்துள்ளதாகவும், ஏப்ரல் 30ம்தேதி. மே 1ம்தேதி மழை, மற்றும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக  கூறினார்.

அவசர காலத்தில் உடனடியாக அந்த பகுதிக்கு செல்ல விரைந்து செல்ல பேரிடர் மீட்பு படைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர் இன்று தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து துறை செயலளர்கள் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். புயலை எதிர்கொள்ள அதிக ஊழியர்கள் நியமித்து 24மணி நேரம் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும், முகாம்கள் தயார் நிலையிள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிக தனியார் கட்டிடஙகளையும் முகாம்களாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 8 ஆயிரம் பெண்கள் உடபட 30ஆயிரம் ஊழியர்கள் பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு முதலில் செல்லும் நபர்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் 3 பிரிவுகளாக பேரிடர் மீட்பு செய்ய திட்டமிட்டுள்ளோம் புயலுக்கு முன் தயார் நிலை, புயலின் போது பாதுகாப்பு, புயலுக்கு பின் மீட்பு பணி என்கிற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

6 தேசிய பேரிடர் மேலாண்மை குழு தயார் நிலையில் உள்ளார்கள்,பேரிடர் காலத்தில் மின் ஊழியர்கள் பங்கு மகத்தானது, அவர்களும் தயார் நிலையி உள்ளனர், அதே போல பொதுபானிதுறை, நெடுஞ்சாலைதுறை, ஆகிய துறைகளில்ப உள்ள ஜே.சி.பி மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

புயலை சரியாக கணிக்க முடியாத காரணத்தால் எந்த தாக்கத்திற்கும் தயாரக அனைத்து ஏற்பாடுகளை செய்த்குள்ளோம்,தேர்தல் ஆணையம் தேவையான அனுமதி வழங்கியுள்ளதால் மீட்பு பணியில் பிரச்சனை இருக்காது. கஜா, வர்தா போன்ற புயல்களை பார்துள்ளோம் எனவே அந்த அனுபவத்தில் இந்த புயலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். புயல் தாக்கும் மாவட்டம், தாக்கம் குறைவாக உள்ள மாவட்டம் என அனைத்து மாவட்டங்களையும் தயாராக இருக்க அரிவுறுத்த ப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் என்பது வெறும் வண்ணம் மட்டுமே,  வழிமுறைகள் பின்பற்ற தயாராக இருக்கவண்டும் என்பது மட்டுமே. ரெட் அலர்ட் என்பது வேறு, ரெட் வண்ண குறி வேறு தேவையில்லாத அச்சம் தேவையில்லை. ரெட் அலர்ட் வந்தால் நாங்கலே தெரிவிப்போம்