62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம்! தகாத உறவு! கண்டுபிடித்த 38 வயது கணவன்! பிறகு..?

சென்னையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கணவருடன் வாழ மறுத்துவிட்டு 62 வயது முதியவரோடு தான் வாழ்வேன் என்று சண்டையிட்டதை அடுத்து அவமானம் தாங்காமல் அந்தப் பெண்ணின் கணவர் அவரை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை எம்ஜிஆர் நகரில் சூலை பள்ளம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு செந்தில் வேல் முருகன்(வயது 38) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் லட்சுமி. இவருக்கு வயது 34. இந்த தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகளும் உள்ளார். செந்தில் வேல்முருகன் வசித்து வரும் இடத்திற்கு அருகில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினர் வசித்து வரும் வீட்டிற்கு அருகில் 62 வயது மிக்க கோவிந்தசாமி என்ற முதியவரும் வசித்து வந்துள்ளார். கோவிந்தசாமி, லக்ஷ்மி வசித்துவரும் வீட்டிற்கு அருகில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

34 வயதாகும் லட்சுமிக்கும் 62 வயதாகும் கோவிந்த சாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களுடைய பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி லக்ஷ்மியின் மகளுக்கு தெரிய வரவே உடனே அவர் தனது தந்தையிடம் நடந்ததைப் பற்றி கூறியிருக்கிறார். இதனை பற்றி அறிந்த லட்சுமியின் கணவர் செந்தில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் மனைவி லட்சுமி மற்றும் கோவிந்தசாமி இருவரையுமே முதலில் கண்டித்தும் பின்பு கெஞ்சியும் பார்த்துள்ளார். இருவருமே எதற்குமே மசியவில்லை.

எவ்வளவு சொல்லியும் இருவரும் தங்களுடைய கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் கூலித் தொழிலாளியான செந்திலுக்கு வருமானம் இல்லை என்று கூறி அவரது மனைவி சண்டை இட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில் லட்சுமி கோபித்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக கள்ளக்காதலன் 62 வயதாகும் கோவிந்தசாமியின் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து செந்தில் தன் மனைவியை தன்னோடு வருமாறு கெஞ்சி அழைத்திருக்கிறார். மகளின் எதிர்காலத்திற்காக கோவிந்தசாமியை விட்டுவிட்டு தன்னோடு வந்து குடும்பம் நடத்துமாறு செந்தில் கூறியிருக்கிறார்.

என்ன சொல்லியும் காதில் வாங்காத லட்சுமி வாழ்ந்தால் கோவிந்தசாமி உடன் தான் வாழ்வேன் என்று கூறி தன் கணவருடன் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் இன்றைய தினம் விடியற் காலை 5:30 மணி அளவில் இரண்டு லிட்டர் பெட்ரோலை வாங்கி கொண்டு கோவிந்தசாமி வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். கதவை திறந்து அவர்களின் மீது அவர் கொண்டு சென்ற பெட்ரோலை ஊற்றி தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவிந்தசாமி மட்டும் காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.