தேனியில் வயதான பெண்மணி கழுத்தை கடித்து கொடூர கொலை! கொரோனா அறிகுறி இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்!

கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் மன உளைச்சளால் மூதாட்டியை கொன்ற சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 29,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 6,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 24-ஆம் தேதியன்று இந்திய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் இந்தியா திரும்பியவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஜக்கமநாயக்கன்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார் 34 வயது நபர் ஒருவர் இங்கு வந்துள்ளார். அவரை கொரோனா காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 7 நாட்களாக தனிமையில் இருந்த இவர் மன உளைச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அதிகாலை மன உளைச்சல் அதிகமான காரணத்தினால் இளைஞர் உடலில் ஒட்டுத்துணியின்றி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தன் வீட்டிற்கு அருகேயுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். அப்போது தன்னுடைய வீட்டு திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாச்சியம்மாள் என்ற 90 வயது மூதாட்டியை தொண்டையில் கடித்து குதறியுள்ளார். நாச்சியம்மாள் வலியால் துடித்து போக, அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டு முதியவரை கொன்ற சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.