இஸ்ரோ காலியிடங்களுக்கான தேர்வு நடக்கப்போவதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிஇ., பட்டதாரிகளுக்கு கை நிறைய சம்பளம்! வேலைக்கு அழைக்கிறது இஸ்ரோ!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் மற்றும் விஞ்ஞானிகளின் காலியிடங்கள் 327 ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 158 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவு 135 பணியிடங்களும், கணினி பிரிவில் 58 பணியிடங்களும் காலியாக உள்ளன.
பி.இ, பி.டெக் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 65 சதவீததத்துடன் தேர்ச்சிபெற்ற 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பத்திற்காக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற பிரிவினர்களுக்கு எந்தவித கட்டணமும் தேவையில்லை.
விண்ணப்பித்த அனைவருக்கும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதியன்று எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அது தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது இஸ்ரோவின் முக்கிய வெப்சைட்டிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.