18 வங்கிகளில் 32,000 கோடி ரூபாய் மோசடி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலம்!

18 பொதுத்துறை வங்கிகளில் 2,480 கடன்கள் மூலம் ரூ. 32000 கோடி மோசடி. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமானது.


2019-20 நிதியாண்டில். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்தம் 2,480 மோசடி கடன்தாரர்களால், ரூ. 31,898.63 கோடி அளவிற்கு 18 பொதுத்துறை வங்கிகளின் மூலமாக நடைபெற்றுள்ளதாக.

மத்திய பிரதேசத்தின் மால்வா பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகர் கவுர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

இந்த வங்கி மோசடியில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக திகழும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 38 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. அதாவது 1197 கடன்காரர்களுக்கு சுமார் 12012 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு. வங்கி கடன் மோசடியில் முண்ணனி வகிக்கிறது. அடுத்ததாக அலகாபாத் வங்கியில். 381 மோசடி கடன்கள் மூலம் ரூ .1,855.46 கோடியளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது .

முறையே பஞ்சாப் நேஷனல் வங்கியில் 99 கடன் பெற்ற நிறுவனங்கள் மூலம் 2526 கோடி மோசடியும். 75 கடனீட்டாளர்கள் மூலம் 2297 கோடி பேங்க் ஆஃப் பரோடாவிலும். 45 கடன்காரர்கள் மூலம் 2133 கோடி ஓரியண்டல் வங்கி மூலமாகவும், 2035 கோடி கனரா வங்கியிலும், 1982 கோடி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவிலும்.

1196 கோடி யுனைடெட் வங்கியிலும். 960 கோடி கார்பரேஷன் வங்கியிலும். 934 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும். 795 கோடி சிண்டிகேட் வங்கியிலும், 753 கோடி யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மூலமாகவும். 517 கோடி பேங்க் ஆஃப் இந்தியாவிலும், 470 கோடி யூகோ வங்கியிலும் மற்றும் இந்த கடன் மோசடிகளில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஆந்திர வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவை அடங்கியுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.

கணக்கில் வராத கீழ்க்கண்ட வங்கிகளின் தகவல் அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் இந்த மோசடி தொகை இன்னும் உயரும் என்று கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் வங்கி இணைப்பில் சம்பந்தப்பட்டு இருந்த அனைத்து வங்கிகளும் ஒரு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அதேவேளையில் இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் தான் வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்குகளும், தொகைகளும் அதிகரித்து உள்ளது என ஆர்.டி.ஐ தகவலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில். 2014-2015 நிதியாண்டில் இருந்து 2017-2018 நிதியாண்டு வரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள், பிற சிறிய நிதி நிறுவனங்கள் என மொத்தமாக 9,193 வங்கி கடன் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும். இதன் மூலம் சுமார் 77,500 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது.

மேலும் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாவது ஐந்தாண்டில் (2009-2014) பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 10,652 மற்றும் அதில் ஈடுபட்ட மொத்த தொகை 22,441 கோடி என 2018ம் ஆண்டு ஆர்.பி.ஐ அளித்த தகவலில் இடம்பெற்றுள்ளது.

மக்கள் நலம் சார்ந்த கடன்களை விட. கட்சி சார்ந்த தொழிலதிபர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையே அதிக அளவில் வராக்கடனாக அறிவிக்கப்படுகிறது. வங்கிகள் பொது மக்களிடம் காட்டுகிற கண்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை இதுபோன்ற கடன் மோசடியில் ஈடுபடுபவர்களிடம் எப்போதும் காட்டுவதில்லை என்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2014 முதல் 2018 வரை இதுவரை 14,034 பேர் வங்கி கடன் பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதில் பலர் விவசாயிகள் ஆவர். 

ஆனால் இந்தியாவில் எந்தவொரு பணக்கார கடன்காரர்களுக்கு இதுவரை இதுபோன்ற வங்கி மோசடிகளால் குறைந்தபட்சம் சிறைத்தண்டனை கூட வழங்கப்பட வில்லை என்பதுதான் வருத்தப்பட கூடிய ஒன்றாக விளங்குகிறது.

நீரவ் மோடி. விஜய் மல்லையா போன்ற பெரும் பணக்காரர்கள் வங்கியில் வாங்கிய கடனை ஏமாற்றியிருந்தாலும். தற்போது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையை தான் வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.

இவர்கள் மீது இந்திய அரசு எடுத்துள்ள அதிகபட்ச நடவடிக்கை என்னவென்றால், இவ்விருவரின் ஆதார் அட்டை ரத்து செய்தது மட்டுமே. இதே குப்பனோ, சுப்பனோ ஆயிரம் ரூபாய் கடனை கட்டாமல் விட்டிருந்தால் இந்நேரம் தூக்கில் தொங்கி மாண்டிருப்பான். இதுதான் இன்றைய வலிமை மிக்க இந்தியச் சட்டங்கள் என நம்பப்படுகின்றது.

மணியன் கலியமூர்த்தி.